செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட சில காய்கறிகளை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் இவற்றை புதைத்து வைத்தால் போதும் செடிகள் துளிர்க்கத் துவங்கிவிடும். அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. விதை மற்றும் குழல் வடிவ தாவரங்களின் கிளைகளில் உள்ள ஈரப்பதமே அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். 30 நாட்களில் காய்த்து குலுங்கத் துவங்கும். ஒரு ரோபோவை பூமியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கி, நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் தோட்டத்தைப் பராமரிக்க முடியும். இவ்வாறு ஆராய்ச்சி முடிவுகளை அடுக்குகிறார்கள் விஞ்ஞானிகள்.
No comments:
Post a Comment