Monday, October 18, 2010

எண்ணி ரெண்டே வருஷத்தில்.. படுபயங்கர சூரிய சூறாவளி பூமியை தாக்கலாம்

உலகம் அழியப் போகிறது என்று உள்ளூர் சாமியார்கள் முதல் நாசா விஞ்ஞானிகள் வரை அவ்வப்போது பீதி கிளப்புவார்கள். ‘2010, 2012&ல் உலகம் அழிஞ்சா இப்படித்தான் இருக்கும்.. பார்த்துக்கோங்க’ என்று சில ஹாலிவுட் படங்களும் அடிக்கடி வெளியாகி லப்டப்பை அதிகரிக்கின்றன.




கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தென்அமெரிக்காவில் வாழ்ந்ததாக கூறப்படும் இனம் மயன் இனம். கி.மு. 3113&ல் ஆரம்பித்து மிகத் தெளிவாக அந்த காலத்திலேயே காலண்டர் தயாரித்திருக்கின்றனர். அந்த காலண்டர் 2012&ம் ஆண்டுடன் முடிகிறது. ‘மயன் மக்களே சொல்லிட்டாங்க.. 2012&ல் உலகம் அழியப்போகுது’ என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.



புரளிகள் ஒரு பக்கம்.. ‘ஒருவேளை அழிஞ்சிடுமோ’ என்று சீரியசாய் ஆராய்ச்சிகள் ஒரு பக்கம்.‘அழிகிறதோ, இல்லையோ.. 2012&ம் ஆண்டு டிசம்பர் 21&ம் தேதி படுபயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது நிச்சயம்’ என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக வல்லுனர்கள்.



‘‘2012 டிசம்பர் 12&ம் தேதி இயல்புக்கு மாறாக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும், தவறினால் உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக உஷ்ணக் கதிர்கள் மற்றும் மின்காந்த அலைகளைத் தாங்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை நெருங்கும் போது பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தகிக்கும். உலகம் முழுவதும் மின்சாரம், விண்கலங்கள், செயற்கைக்கோள், தொலைதொடர்பு, செல்போன் ஆகியவை அனைத்தும் ஸ்தம்பிக்கும்’’ என்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.



கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989&ம் ஆண்டு தாக்கியது. தொடர்ச்சியாக 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்துவிட்டது. 2012&ல் வரப்போகும் சூரியப் புயல் மொத்த பூமியையும் தாக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார். இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம்

செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட சில காய்கறிகளை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் இவற்றை புதைத்து வைத்தால் போதும் செடிகள் துளிர்க்கத் துவங்கிவிடும். அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. விதை மற்றும் குழல் வடிவ தாவரங்களின் கிளைகளில் உள்ள ஈரப்பதமே அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். 30 நாட்களில் காய்த்து குலுங்கத் துவங்கும். ஒரு ரோபோவை பூமியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கி, நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் தோட்டத்தைப் பராமரிக்க முடியும். இவ்வாறு ஆராய்ச்சி முடிவுகளை அடுக்குகிறார்கள் விஞ்ஞானிகள்.

370 கோடி ஆண்டில் பிரபஞ்சம் அழியும்?

வாஷிங்டன், அக்.12: வரும் 2012ம் ஆண்டில் உலகம் அழிந்துவிடும் என்று பரபரப்பாக செய்திகள் வந்து ஓய்ந்துள்ளன. ஆனால், உலகம் அழிய 370 கோடி ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக இயற்பியல் துறை விஞ்ஞானி ரபேல் பவுசோ தலைமையிலான குழுவினர், பிரபஞ்சம் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது:




அண்ட வெளியில் நீர்க்குமிழி போன்ற சில ரசாயன குமிழிகள் உருவாகி உள்ளன. அவை வடிவில் பெரிதாகிக் கொண்டே போகின்றன. பல குமிழிகள் உடைந்து மறைந்து விடுகின்றன. அவற்றில் ஏராளமான குமிழிகள் நாளுக்கு நாள் பெரிதாகி வருகின்றன. நீர் கொதிக்கும்போது ஏற்படும் குமிழிகள் போல் அவை உள்ளன.



இதுபோன்ற குமிழிகள் எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு பெரிதாகும் போது அண்டவெளி உட்பட எல்லாமே அழியும். அதற்கு 370 கோடி ஆண்டுகள் ஆகும். இவ்வாறு ரபேல் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை ஆஸ்திரேலிய பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கிண்டலடித்துள்ளனர்.



‘‘அமெரிக்க ஆய்வுக் குழு ஏதோ புள்ளியியல் விவரங்களை வெளியிட்டுள்ளது. பிரபஞ்சம் பற்றிய அவர்களுடைய கணக்கில் உள்ள பிரச்னைகளுக்கு முடிவே கிடைக்காது. அதனால், பிரபஞ்சம் உண்மையில் அழியும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்’’ என்று கிண்டல் செய்துள்ளனர்.